சிவஞான சித்தியார் (பரபக்கம் – சுபக்கம்) மூலமும் உரையும்
₹250.00
உரையாசிரியர்: கா. சுப்பிரமணிய பிள்ளை
பக்கங்கள்: 220
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- மெய்கண்டதேவ நாயனார் அருளிச் செய்த சிவஞானபோதம் பன்னிரு சூத்திரங்களுக்கு, செய்யுள் வடிவில் உரையாக அமைந்த நுால் சிவஞான சித்தியார்
- 'சித்திக்கு மேல் நுாலும் இல்லை; சிவத்துக்கு மேல் தெய்வமும் இல்லை' என்ற பழமொழியே இந்நுாலின் அருமையை உணர்த்தும்
- தொண்டை நன்னாட்டு சைவ சித்தாந்தக் கழகம் என்ற சைவ அமைப்பு காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்தது. அதன் தலைவராக கீ. நாராயணசாமி முதலியார் இருந்தார். அவரும், அப்போதைய சைவ சித்தாந்த சமாஜத்தில் தலைவர் மா. பாலசுப்பிரமணிய முதலியாரும், மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்குக்கும் எளிய உரை எழுதித் தரும்படி கா. சுப்பிரமணிய பிள்ளையை வேண்ட, அவர் அவ்வாறே எழுதித் தந்தார்
- 1938 ஆம் ஆண்டு, நாராயணசாமி முதலியார் வெளியிட்ட முதற்பதிப்பில், பதினான்கு சாத்திரங்களும் செய்யுட்களின்றி, அவற்றுக்குரிய பொழிப்புரைகள் மட்டும் இடம் பெற்றிருந்தன
- பின்னாட்களில் அப்பொழிப்புரைக்கான நேர் செய்யுட்கள் சேர்க்கப்பட்டு பதிப்புகள் வெளியாகின. அப்பதிப்பே தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது
- சைவ சித்தாந்தம் பயிலும் மாணவர்கள், அறிஞர் பெருமக்கள் அவசியம் இந்நுாலை வாங்கிப் பயில வேண்டும்




