தில்லைத் திருவாயிரம் – தில்லைப் பாடல் திரட்டு
₹600.00
ஆசிரியர்: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
பக்கங்கள்: 496
வெளியீடு: முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• பத்தொன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
• "மதுரத் தமிழை இகழ் தீயோர் மணி நா அறுத்துக் கனலில் இட" என்று தமிழை இகழ்ந்தவரைத் தண்டிப்பேன் என்று அறைகூவல் விட்டவர்
• இவர் தில்லையில் கோயில் கொண்டருளிய ஆடல்வல்லான் மீது ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார்
• அவற்றுக்கு தில்லைத் திருவாயிரம் எனப் பெயரிட்டு 1889ல் வெளியிட்டார்
• அந்நுாலை முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது
• பசுக்களைக் காக்க வேண்டும், ஆங்கிலேயரின் கொடூர ஆட்சி அகல வேண்டும், ஆடுகளை அறுத்து தீயில் இடும் வேள்வி முறை ஒழிய வேண்டும் என்பது போன்ற கருத்துகள் இவரது பாடல்களில் இடம் பெற்றுள்ளன
• கெட்டி அட்டையோடு, தெளிவான எழுத்துருவில் அமைந்த நுால்







