0

நன்னுால் காண்டிகை உரை – முதற்பாகம் – எழுத்ததிகாரம்

ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்

பக்கங்கள்: 258

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• ஆங்கிலேயேர் ஆட்சியில், தமிழகத்திலும் ஈழத்திலும் ஆங்கில மோகம் அதிகரித்தது. அதனால் கவலையுற்ற நாவலர், தமிழ் இலக்கண, இலக்கிய நுால்களைப் பிழையின்றி அச்சிட்டு வெளியிட்டார்
• 1851 தொடங்கி 1878 வரை நன்னுால், தொல்காப்பியம் எனப் பல இலக்கண நுால்களை அச்சிட்டார்
• 1851ல் நன்னுால் விருத்தியுரையையும், 1878 ல், நன்னுால் காண்டிகை உரையையும் வெளியிட்டார்
• காண்டிகை உரை என்றால், பதவுரையோடு, செய்யுளின் மையக் கருத்தை சுருக்கமாக சொல்லி, வினா – விடை வழியாகவும் செய்யுளை விளக்குதல் என்று பொருள்
• அதனால் இந்நுாலில், ஒவ்வொரு பகுதி முடிந்த உடன், தேர்வு வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும்
• தமிழகத்தில் பல ஆண்டுகள் இந்நுால், கல்லுாரிகளில் பாடநுாலாக வைக்கப்பட்டிருந்த பெருமையுடையது
• நன்னுால் கற்க விரும்புவோருக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டி

Order on WhatsApp