திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் (தலமுறை) (மூலம்)
₹150.00
ஆசிரியர்: திருநாவுக்கரசு சுவாமிகள்
பக்கங்கள்: 560
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• சமயக்குரவரில் இரண்டாமவரான அப்பரடிகள் அருளிச் செய்த பாடல்கள், நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக அமைந்துள்ளன
• இத்தொகுப்பில், அந்த மூன்று திருமுறைகளும் தலமுறை அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன
• இதில், முதலில் கோயில் எனப்படும் சிதம்பரம் தலம் இடம்பெறும்
• அப்பரடிகளின் தேவாரப் பாடல்கள், நான்காம் திருமுறையில் திருநேரிசை, திருவிருத்தம் என்ற யாப்புகளையும், ஐந்தாம் திருமுறையில் திருக்குறுந்தொகை மற்றும் ஆறாம் திருமுறையில் திருத்தாண்டகம் என்ற யாப்புகளையும் கொண்டவை. நான்காம் திருமுறையில், காந்தாரம், பியந்தைக்காந்தாரம், சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம்பஞ்சுரம், சீகாமரம், இந்தளம் ஆகிய பண்கள் இடம்பெறுகின்றன
• அப்பரடிகளின் வாழ்க்கை சுருக்கம் நுாலின் முதலில் உள்ளது. பாடல் அகரவரிசை, நுாலின் இறுதியில் உள்ளது
• அப்பரடிகளின் தேவாரத்தைப் பயில விரும்புவோர் அவசியம் வாங்க வேண்டிய நுால் இது





