0

சிவதருமோத்தரம் – மூலமும் உரையும்

600.00

ஆசிரியர்: சிதம்பரம் கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த நாயனார்

உரையாசிரியர்: மறைஞான தேசிகர்

பக்கங்கள்: 688

வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை

• இந்நுால், சைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொது அறங்களையும், சைவ அறங்களையும் வகுத்துக் கூறுகிறது
• மொத்தம் 13 பிரிவுகளில், 1208 பாடல்களைக் கொண்டது. பாடல்கள் எளிமையானதும், தெளிவானதுமாக உள்ளன
• இந்நுாலாசிரியரின் மாணவரான மறைஞான தேசிகர் இந்நுாலுக்கு உரை செய்தார் எனவும், அவ்வுரையை, 1867 ம் ஆண்டு தொடங்கி அச்சிட்டவர்கள் பலவாறாக சிதைத்து அச்சிட்டனர் எனவும் பேரறிஞர் மு. அருணாசலம் கூறுகிறார். அது உண்மையே.
• சிதைக்கப்பட்ட உரை, 1938 ஆம் ஆண்டு, மதராஸ் ரிப்பன் பிரஸ் மூலம் வெளியானது. அதே உரையே இந்நுாலிலும் இடம் பெற்றுள்ளது
• மக்களில் பேதம் பார்க்காது அனைவருக்கும் அன்னதானம் முதலிய அறங்களை செய்ய வேண்டும் என்பதும், சிறப்பாக அடியார்களுக்கும் சைவ ஞானியர் பெருமக்களுக்கும், ஞான நுால்களை ஓதுவிக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய அறங்களை செய்ய வேண்டும் என்பதும் இந்நுாலின் மையக் கருத்து
• செய்யுட்கள் கூறும் நுட்பமான கருத்துகளை விரித்துக் கூறல், விரிந்த கருத்துகளை செறித்துக் கூறல், வேண்டிய தகவல்களை உரையில் எழுதிக் காட்டல், செய்யுட்களின் இயைபுகளை இயைத்துக் காட்டல், ஆசிரியரின் உள்ளக் கருத்தை விளக்கிக் காட்டல் எனப் பல விதங்களில் இவ்வுரை சிறப்புடையது

Order on WhatsApp