மதுராபுரி அம்பிகை மாலை, தோத்திர சிகாமணி முதலிய அருள் நுால்கள்
₹33.00
ஆசிரியர்: குலசேகர பாண்டியன் முதலியோர்
பக்கங்கள்: 71
வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால் நிலையம்
- ஓலைச் சுவடிகளில் இருந்து இலக்கியங்களை அச்சு நுால்களாக்கும் திட்டத்தில், அம்மை மீதான அருள்நுால்கள் 2004ல் வெளியிடப்பட்டன
- மதுராபுரி அம்பிகை மாலை, தோத்திர சிகாமணி உள்ளிட்ட ஆறு நுால்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
- இவற்றில், மதுராபுரி அம்பிகை மாலை, காப்பும், நுாற்பயனும் சேர்த்து 32 கட்டளைக் கலித்துறைப் பாக்கள் கொண்ட சிறு துதி நுால்; அபிராமி அந்தாதி இந்நுாலின் சாயை கொண்டது
- இந்நுால், 1893 ஆம் ஆண்டு முதல் பல முறை அச்சாகியுள்ளது. இதன் ஆசிரியர், 16 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த தென்காசிப் பாண்டியர் மரபைச் சேர்ந்த வரகுணராமன் என்ற குலசேகர பாண்டியனாக இருக்கக் கூடும் என்பது சைவப் பேரறிஞர் மு. அருணாசலத்தின் முடிவு
- அபிராமி அந்தாதி 18 ஆம் நுாற்றாண்டில் தோன்றியது
- ஆனால் இந்நுால் பதிப்புரையில், 1966ல் முதல் பதிப்பு வந்ததாகவும், அபிராமி அந்தாதியின் தாக்கம் இந்நுாலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- சைவப் பெருமக்கள் தினசரி பாராயணத்திற்குப் பயன்படுத்தும் அம்மை மீதான துதிகள் அடங்கிய நுால் இது






