திருநாவுக்கரசர் தேவாரம் (4, 5, 6 திருமுறைகள்) – பண்முறை
₹800.00
ஆசிரியர்: திருநாவுக்கரசு நாயனார்
பக்கங்கள்: 650
வெளியீடு: முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• சமயக்குரவரில் இரண்டாமவரான அப்பரடிகள் அருளிச் செய்த பாடல்கள், நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக அமைந்துள்ளன
• இத்தொகுப்பில், அந்த மூன்று திருமுறைகளும் பண்முறையில் தொகுக்கப்பட்டுள்ளன
• இதில், முதலில் திருவதிகை வீரட்டானத்தில் அப்பரடிகள் முதலில் பாடிய ‘கூற்றாயினவாறு’ என்ற கொல்லிப் பண்ணில் பாடப்பட்ட தேவாரம் இடம்பெறும்
• அப்பரடிகளின் தேவாரப் பாடல்கள், நான்காம் திருமுறையில் திருநேரிசை, திருவிருத்தம் என்ற யாப்புகளையும், ஐந்தாம் திருமுறையில் திருக்குறுந்தொகை மற்றும் ஆறாம் திருமுறையில் திருத்தாண்டகம் என்ற யாப்புகளையும் கொண்டவை. நான்காம் திருமுறையில், காந்தாரம், பியந்தைக்காந்தாரம், சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம்பஞ்சுரம், சீகாமரம், இந்தளம் ஆகிய பண்கள் இடம்பெறுகின்றன
• அப்பரடிகளின் வாழ்க்கை சுருக்கம் நுாலின் முதலில் உள்ளது. செய்யுள் முதற்குறிப்பகராதி, நுாலின் இறுதியில் உள்ளது. கெட்டி அட்டை
• அப்பரடிகளின் தேவாரத்தைப் பயில விரும்புவோர் அவசியம் வாங்க வேண்டிய நுால் இது.






