திருவாதவூரர் சிவபோத வாழ்க்கை
₹80.00
ஆசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்
பக்கங்கள்: 134
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
- சிவஞானபோதம் இலக்கணம் என்றால், மாணிக்கவாசகரின் அருள் வாழ்க்கை இலக்கியம். இவ்வுண்மையையே இந்நுால் உணர்த்துகிறது
- இந்நுால் சிவபோதப் பகுதி, வாழ்க்கைப் பகுதி, சிவபோத வாழ்க்கைப் பகுதி என மூன்று பகுதிகளாக உள்ளது
- முதல் பகுதியில், சமயநெறி, அதற்கான படிநிலைகள், நால்வகை நெறிகள், திருவாசகத்தின் சிறப்பு முதலியவை விளக்கப்பட்டுள்ளன
- இரண்டாவது பகுதியில், மணிவாசகரின் அருள் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. மணிவாசகர், மூவர் முதலிகளுக்கு முற்பட்டவர் என்ற கருத்துடையவர் இந்நுாலாசிரியர். அதையும் பதிவு செய்துள்ளார். திருக்கோவையார் குறித்த சிந்தனையும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது
- மூன்றாவது பகுதியில், சிவஞானபோத நுாற்பாக்களுக்கு ஏற்ப மணிவாசகரின் வாழ்க்கை இலக்கியமாகத் திகழும் பாங்கு விரித்து உரைக்கப்பட்டுள்ளது
- சித்தாந்த சாத்திரங்கள் பயில்வோர், இந்நுாலையும் அவசியம் பயில வேண்டும் என்பதில் ஐயமில்லை





