திருவாசக அருள்முறைத் திரட்டு – உரையுடன்
₹450.00
உரையாசிரியர்: மா. வே. நெல்லையப்ப பிள்ளை
பக்கங்கள்: 424
வெளியீடு: கவின் பப்ளிகேஷன்ஸ்
- துாத்துக்குடி சைவ சித்தாந்த சபையில், சித்தாந்த ஆசிரியராகப் பல்லாண்டுகள் சிவப்பணி செய்தவர் மா. வே. நெல்லையப்ப பிள்ளை. அதனாலேயே ஆசிரியர் என்று அவர் போற்றப்பட்டார்
- அவர், உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த தேவார அருள்முறைத் திரட்டுக்கு உரை எழுதி வெளியிட்டார்
- அவ்வப்போது சித்தாந்தம், செந்தமிழ்ச் செல்வி இதழ்களில், திருவாசகப் பாடல்களுக்கும் உரை எழுதி வந்தார்
- பின், திருவாசகப் பாடல்களை மட்டும் தொகுத்து, அவற்றில் திருத்தம், கூடுதல் உரை சேர்த்து, திருவாசக அருள்முறைத் திரட்டு நுாலை, 1943 ஆம் ஆண்டு வெளியிட்டார்
- திருவாசகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 112 பாடல்களுக்கு மட்டும் உரை எழுதினார்
- ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரையும், விளக்கவுரையும் தந்துள்ளார்
- முதல் நான்கு அகவல்களில் சில அடிகளை மட்டும் தேர்வு செய்து அவற்றுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்
- திருவாசகத்தின் ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு தலைப்பும், அதன்கீழ், அத்தலைப்பிற்கான ஞானப் பொருளை உணர்த்தும் கொளுவும் கொடுக்கப்பட்டிருக்கும். அவ்விரண்டிற்குமான பொருளையும் பிள்ளையவர்களே முதன்முதலில் விளக்கி எழுதியுள்ளார்
- சைவ சமயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர், சைவ சித்தாந்தம் பயில்வோர், ஆரம்ப நிலையில் உள்ளோருக்கு இந்நுால் பெரிதும் உதவும்




