0

சிவஸ்தவாபரணம் (சைவத் துதி நகைகள் – தமிழுரையுடன் – தமிழில்)

300.00

தொகுப்பாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்

பக்கங்கள்: 200

வெளியீடு: ஸ்ரீ ஸர்வஸித்தி விநாயகர் திருக்கோயில் அறக்கட்டளை

• சைவ சமயத்தின் உயிர் நாடியான கொள்கை சிவபரத்துவமே. அதாவது சிவபெருமான் ஒருவனே கடவுள் என்பதாம்
• அக்கடவுளை வாயார, மனமார துதித்தல் அடியவர்களின் கடன். இந்நுால் அத்தகைய துதிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது
• சமயாசாரியர், சந்தானாசரியர் வரலாறு, சைவ சமயத்தின் வகைகள், பன்னிரு திருமுறை அருளாளர்கள் துதிகள், அறுபத்து மூவர் வரலாற்று சுருக்கம், பஞ்சபுராணத் தொகுப்புகள் ஆகியவை நுாலின் முதற் பகுதியில் இடம் பெற்றுள்ளன
• மூவர் முதலிகளின் பஞ்சாக்கரத் திருப்பதிகங்கள், சிவபுராணம், திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், அபிராமி அந்தாதி, திருப்புகழ்கள், பாம்பன் சுவாமிகள் பாடல்கள் ஆகியவை நுாலின் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ளன
• லிங்காஷ்டகம் தொடங்கி ஸாதன பஞ்சகம் வரையிலான 22 வடமொழி துதி நுால்கள் தமிழ் எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்க உரையும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது
• இந்த வடமொழித் துதி நுால்களில் ஹரதத்த சிவாச்சாரியரின் தசஸ்லோகீ ஸ்துதி, சிவபுஜங்கம், புஷ்பதந்தரின் சிவமஹிம்ன ஸ்தோத்ரம், காலபைரவாஷ்டகம் ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை
• நுாலின் இறுதியில் வாழ்த்துப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பாராயணம் செய்ய வேண்டிய நுால்

Order on WhatsApp