சிவஞான(போத) மாபாடியம்
₹500.00
ஆசிரியர்: மெய்கண்டதேவ நாயனார்
உரையாசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
பதிப்பாசிரியர்: முனைவர் ச. வே. சுப்பிரமணியன்
பக்கங்கள்: 576
வெளியீடு: அமுதநிலையம்
- மெய்கண்ட சாத்திர நுால்களில் தலையாயது மெய்கண்டதேவ நாயனார் அருளிச் செய்த சிவஞானபோதம். மொத்தமே 12 சூத்திரங்கள் தான்
- இந்நுாலுக்கு பல உரைகள் இருந்தாலும், 18 ஆம் நுாற்றாண்டில், திருவாவடுதுறை ஆதீனத்துக் குலதெய்வமாகிய ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த பேருரையையே சைவ உலகம் இன்று வரை போற்றி வருகிறது
- இந்தப் பேருரை, வடமொழியில் பாஷ்யம் என்றும் தமிழில் பாடியம் என்றும் அழைக்கப்படுகிறது. மகா பாஷ்யம் என்பதை மாபாடியம் எனத் தமிழில் வழங்குவர்
- இப்பேருரை இல்லையேல் சிவஞானபோதத்தின் உட்கருத்தை அறிஞர்களாலும் உணர்ந்து கொள்ள இயலாது
- சைவ சித்தாந்தம் பயில்வோர், சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி தம் வீட்டு நுாலகத்தில் வைத்துப் பயில வேண்டிய நுால் இது




