கழுகுமலை சுப்பிரமணியர் காவடிச் சிந்தும் வழிநடைப் பதமும்
₹60.00
ஆசிரியர்: சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்
பக்கங்கள்: 48
வெளியீடு: அறுபத்துமூவர் குருபூஜைக் குழு
- இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள சென்னிக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை ரெட்டியார். 19 ஆம் நுாற்றாண்டினர்
- காவடிச் சிந்தின் தந்தை என்று போற்றப்படும் இந்தக் கவி, கழுகுமலை சுப்பிரமணியர் மீது பாடியதுதான் காவடிச் சிந்துப் பாடல்கள். இவை மொத்தம் 22 பாடல்கள். வழிநடைப் பதம் இரண்டு பாடல்கள்
- ஊத்துமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத் தேவர், கழுகுமலைக்கு காவடி சுமந்து பாதயாத்திரையாக சென்றபோது, அண்ணாமலை ரெட்டியார் பாடியவையே காவடிச் சிந்துப் பாடல்கள்
- காவடிச் சிந்து தவிர, வீரையந்தாதி, வீரைத் தலபுராணம், கோமதி அந்தாதி, வீரை நவநீத கிருட்டிணபிள்ளைத்தமிழ், சங்கரநாராயணர் கோயில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை ஆகிய நுால்களும் பாடியுள்ளார். இவை அச்சாகவில்லை
- அவர் பாடிய காவடிச் சிந்தும், வழிநடைப் பதமும் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. விரிவான ஆய்வு முன்னுரையும் உள்ளது





