0

கந்தர் கலிவெண்பா (நான்கு பேரறிஞர்களின் உரைக்கொத்து)

100.00

உரையாசிரியர்கள்: முத்து. சு. மாணிக்கவாசக முதலியார், அருணைவடிவேல் முதலியார், உ.வே.சாமிநாத ஐயர், பட்டுச்சாமி ஓதுவார்

பக்கங்கள்: 255

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்

• குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த நுால்களுள், கந்தர் கலிவெண்பா சைவப் பெருமக்களால் தினசரி பாராயணம் செய்யப்படுவது
• பிறவியில் இருந்தே பேசாமல் இருந்த சுவாமிகள், ஐந்தாவது வயதில், திருச்செந்துார் முருகப் பெருமான் திருமுன் பாடியருளிய அருட்பனுவல் இது
• சைவ சித்தாந்தக் கருத்துகளின் சாரம் அனைத்தையும் இவ்வருள் நுாலில் கொட்டியிருப்பார் சுவாமிகள்
• இப்பாடலை தினசரி பாராயணம் செய்வோர் முருகப் பெருமானின் அருளும், கல்வி வளமும், இலக்கண இலக்கியப் புலமையும், பேசுந்திறமும், செல்வப் பெருக்கமும், காரிய சித்தியும் பெற்று புகழுடன் விளங்குவர்
• முத்து சு. மாணிக்கவாசக முதலியார் (பின்னாளில் தொண்டை மண்டல ஆதீனகர்த்தராக எழுந்தருளியவர்), அருணைவடிவேல் முதலியார், உ.வே.சா., பட்டுச்சாமி ஓதுவார் ஆகிய நான்கு பேரறிஞர்களின் உரைகளோடு இந்நுால் வெளியாகியுள்ளது
• சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கி உரைகளைப் படித்து உணர்ந்து பாராயணம் செய்ய வேண்டிய நுால் இது

Order on WhatsApp