0

ஆகம சான்றுப் பேழை (ஆகமம், ஆலயம், ஆதிசைவர், ஆசார்யர்)

350.00

ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்

பக்கங்கள்: 184

வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்

• ஆகமம் என்றால் என்ன? ஆலயம் என்றால் என்ன? ஆதிசைவர் என்போர் யார்? சைவ சமய அறநெறி யாது? ஆலய வழிபாட்டின் நோக்கம் என்ன, பயன் என்ன? என்பனவற்றை, சாதாரண மக்கள் முதல் அதிகாரிகள் வரையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நுால் தொகுக்கப்பட்டுள்ளது
• ஆதிசைவர்களுக்கும் சிவாலயங்களுக்குமான தொடர்பை இந்நுால் பல சான்றுகளுடன் விவரிக்கிறது
• சிவாலயங்களின் அமைப்பு முறைகள், அவற்றின் தத்துவார்த்தம், ஆறுகால பூஜைகள், அவற்றின் தத்துவார்த்தம், ஆதிசைவர்களைப் பற்றிய அறிமுகம், அவர்களுக்கும் சிவாலயங்களுக்குமான தொடர்புகள், ஆகம மந்திரங்கள் என இவை அனைத்தும் நுாலின் முதற்பகுதியில் இடம் பெற்றுள்ளன
• நுாலின் இரண்டாம் பகுதியில், சைவ சமயம், சிவாகமங்கள், ஆன்மார்த்த, பரார்த்த வழிபாடுகள், பரார்த்த பூஜையை செய்வதற்கான அதிகாரிகள் என இவை பற்றிய அறிமுகம் இடம் பெற்றுள்ளன
• மூன்றாம் பகுதியில், சைவ ஆகமங்களுக்கும் சிவாசார்யர்களுக்குமான தொடர்புகள், சிவாகமங்களின் சிறப்புகள், வடபாரத கோயில்களுக்கும் தென்பாரத கோயில்களுக்குமான வித்தியாசங்கள், சிவாசார்யர்கள் தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்லக் கூடாது என்ற ஆகம விதிகள் என இவை போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன
• சிவாலயங்களுக்கு சிவாகமங்களும் ஆதிசைவர்களும் மிகவும் முக்கியம் என்பதை இந்நுால் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது
• சைவ சமயம், சிவாகமங்கள், ஆதிசைவர்கள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp