கந்தர் அநுபூதி – மூலமும் உரையும்
₹200.00
உரையாசிரியர்: மா. வே. நெல்லையப்ப பிள்ளை
பக்கங்கள்: 200
வெளியீடு: கவின் பப்ளிகேஷன்ஸ்
- அருணகிரிநாதர் அருளிச் செய்த அருள்நுால்களுள் தலையாயது கந்தர் அநுபூதி; நுாலின் பெயரே, திருவருளை உணர்த்தி நிற்கிறது
- இந்நுாலுக்கு 20 ஆம் நுாற்றாண்டில் சைவ சித்தாந்த நல்லறிஞர் சிலர் உரை எழுதி வெளியிட்டனர்
- அவற்றுள் துாத்துக்குடி சைவ சித்தாந்த சபையில், ஆசிரியர் என்று போற்றப்பெற்ற மா. வே. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் 1943 ஆம் ஆண்டு வெளியிட்ட இவ்வுரை சிறந்த உரையாகத் திகழ்கிறது
- கிருபானந்த வாரியார் நடத்திய 'திருப்புகழமிர்தம்' பத்திரிகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க, 1940 ஆம் ஆண்டு சித்திரையில் எழுதத் தொடங்கி, 1942 ஆம் ஆண்டு சித்திரையில் முடித்தார். பின், 1943 ஆம் ஆண்டு நுாலாக வெளியிடப்பட்டது
- அதன்பின், 1996 ஆம் ஆண்டு தான் இந்நுால் மறு அச்சு கண்டது. தற்போது கவின் பப்ளிகேஷன்ஸ் மூலம் மீள்பதிப்பு கண்டுள்ளது
- முதற்பதிப்பின் முகவுரையில், கந்தர் அநுபூதியில் உள்ள பாடல்களுக்கான கருத்துகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார் உரையாசிரியர்
- ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரையும் விளக்கவுரையும் இடம் பெற்றுள்ளன
- சைவப் பெருமக்கள், அவசியம் இந்நுாலைப் பயில வேண்டும்




